த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
பிகினி உடையால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும். காம உணர்வை தூண்டும் அந்த உடையை அணிந்து நான் நடிக்க மாட்டேன் என்று நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நாயகிகள் பட்டியில் இடம் பிடித்திருக்கும் வித்யாபாலன் தற்போது நடித்து முடித்துள்ள இஷ்கியா படத்தில் படு கிளாமராக நடித்திருக்கிறார். இதன் அடுத்த பரிணாம வளர்ச்சி பிகினி உடைதான் என்று பாலிவுட் பக்கம் செய்திகள் பரவி வருகின்றன. இதுபற்றி அம்மணியிடம் கேட்டால்... அலறியடித்து ஓடுகிறார். பிகினியா... நானா...? நோ... நோ! என்று சொல்லும் வித்யாபாலன், நான் கண்ணை உறுத்தும் கவர்ச்சிக்கு எதிரானவள். பா படத்திலும் சரி, இஷ்கியா படத்திலும் சரி... சேலைகளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன். சேலைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில்தான் நமது உண்மையான அழகு தெரியும். அதுதான் எனக்கு சவுகரியமாகவும் இருக்கிறது. பிகினி உடை தேவையில்லாதை சர்ச்சைகளைத்தான் உருவாக்கும். காம உணர்வையும், காம எண்ணங்களையும் தூண்டி விடும் அந்த உடையை அணிந்து நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.