ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கஜோல் மீது நடிகை ஸ்ரீதேவி செம காட்டத்தில் இருக்கிறாராம். அவர் காட்டத்திற்கான விஷயம் இதுதான், தில்வாலே துல்கனியா லீ ஜயங்கே, குச்குச் கோத்தா ஹை போன்ற படங்களின் மூலம் புகழில் உச்சிக்கு சென்ற கஜோல் தமிழிலும் மின்சாரக்கனவு படத்தால் பிரபலமானார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் அவரது சினிமா ஆசை மீண்டும் துளிர்க்க தொடங்கியுள்ளது. இதை அறிந்து அவரது கணவர் அஜய், மனைவியை வைத்து படம் பண்ணலாம் என திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில், பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தான் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் கேட்டுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்த போது, கஜோல் பக்கம் தயாரிப்பாளர் கவனம் திரும்பியது. இதைதொடர்ந்து கஜோலை அந்த தயாரிப்பாளர் அணுகினாராம். ஏற்கனவே சினிமா ஆசையில் இருந்த கஜோல், உடனே ஓ. கே. சொல்லி விட்டராம். தனது வாய்ப்பை கஜோல் பறித்து கொண்டார் என்பதால் தான் அவர் மீது ஸ்ரீதேவி காட்டத்தில் இருக்கிறாராம்.