பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, துவக்கத்தில் ஒல்லியாகத் தான் இருந்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில், அவரின் உடல் எடை அதிகரித்து விட்டது. அவர் நடித்த படங்கள் தொடர்ந்து ஓடியதால், அவரும், உடல் எடையை பொருட்படுத்தவில்லை. ஆனால், இப்போது தீபிகா, அனுஷ்கா சர்மா போன்ற ஒல்லிக் குச்சி நடிகைகள் நடிக்கும் படங்கள், வசூலை வாரி குவிப்பதாலும், புதிய பட வாய்ப்புகள், அவர்களை தேடிச் செல்வதாலும், பிரியங்காவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு, பகலாக, ஜிம்மிலேயே, தவம் கிடந்து, எடையை கணிசமாக குறைத்து விட்டார்.
சமீபத்தில், சாஞ்ஜீர் படத்தின், விளம்பர நிகழ்ச்சிக்காக வந்திருந்த பிரியங்காவை பார்த்து, அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். பிரியங்காவா இது? நம்ப முடியவில்லையே என, அதிசயித்தனர். அவரிடம், இளம் நடிகைகளின் போட்டியால், பயந்து விட்டீர்களா என, கேட்டபோது, பயமா, எனக்கா என, ஒன்றும் தெரியாத, பாப்பா போல் கேட்டுள்ளார். குத்துச் சண்டை வீராங்கனையாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அதற்காக தான், எடையை குறைத்துள்ளேன் என்கிறார்.