ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
"பொய், ராமன் தேடிய சீதை போன்ற சில தமிழ் படங்களில் நடித்த விமலா ராமனுக்கு, அதற்கு பின், தமிழில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், மலையாளத்தில், அம்மணி மிகவும் பிசி. தன்னுடைய நடிப்புத் திறமை,கேரளா போன்ற, குட்டிமாநிலத்துக்குள் முடங்கி கிடக்கிறதே என, வருத்தப்பட்ட விமலாவுக்கு, இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில், ஒரு படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுடன், நடிக்கவுள்ளாராம். இதனால், மகிழ்ச்சியில் இருக்கும் விமலா,"திறமை உள்ளவர்களை, கடவுள் எப்பவுமே கைவிட மாட்டார். இந்த படங்களுக்கு பின், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் வரிசையில், நானும் இடம் பிடித்து விடுவேன். ஆனால், மலையாளம், தமிழ் போன்ற படங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால், தொடர்ந்து நடிப்பேன் என்கிறார்.