'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
கடந்த, 1990களில், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார், மம்முட்டி நடித்து, பெரும் வெற்றி பெற்ற, "சாம்ராஜ்யம் என்ற படத்தின், இரண்டாம் பாகம் தான், இந்த படம். நிழல் உலக தாதாவை பற்றிய படம் இது. உன்னி முகுந்தன், நிழல் உலக தாதாவாக நடிக்கிறார். "திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என, ஊர்களின் பெயரில், படம் எடுத்த, நம்ம ஊர் பேரரசு தான், இந்த படத்தை இயக்குகிறார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில், இந்த படம் தயாராகிறது. மலையாளத்தில், பொதுவாக, இவ்வளவு அதிக பட்ஜெட்டில் யாரும் படம் எடுப்பது இல்லை என்பதால், இந்த படம் வெளியாவதற்கு முன்பே, மலையாள திரையுலகில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.