தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக, தமிழில், தெலுங்கில், வெற்றிப் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு, பாலிவுட்டில், சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கிறது. பாலிவுட்டுக்கு செல்வதற்கான, திறவுகோலாக, தமிழ், தெலுங்கு படங்கள் விளங்குகின்றன. இந்த இரு மொழிகளிலும், சில ஹிட் படங்களில் நடித்த, காஜல் அகர்வால், தற்போது, "சிங்கம் படத்தின், இந்தி ரீ-மேக்கில், அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார். ஸ்ருதி ஹாசன், அறிமுகமானது, இந்தி படத்தில் தான் என்றாலும், தமிழ், தெலுங்கில், வெற்றி படங்களில் நடித்த பின்தான், அவருக்கு, பாலிவுட்டில் புதிய வாய்ப்புகள் கிடைத்தன. அதேபோல், இலியானாவும், இந்த இரு மொழிகளிலும் நடித்து, ஹிட் கொடுத்த பின் தான், பாலிவுட்டில் அவருக்கு பலமான வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது, இந்தியில், மூன்று படங்களை, கைவசம் வைத்துள்ளார், அவர். தமன்னாவும், அப்படித் தான். இதனால், வட மாநிலங்களை சேர்ந்த புதுமுகங்கள், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிப்பதில், ரொம்பவும் ஆர்வம் காட்டுகின்றனர்.