தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல நடிகை, தீபிகாவின் சொந்த ஊர், பெங்களூரு. ஆனாலும், பாலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டி, முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். தன், கலைச் சேவையை, இந்தியுடன் நிறுத்தி விடாமல், தெலுங்கு, தமிழ் படங்களிலும், நடித்து வருகிறார். தமிழில், "கோச்சடையான் படத்துக்கு பின், கமல் ஹாசனுடன், ஒரு படத்தில், ஜோடி சேரப் போகிறார். ஏற்கனவே, வெற்றிக் களிப்பில் இருக்கும் தீபிகாவுக்கு, தற்போது, மேலும் ஒரு தித்திப்பான செய்தி கிடைத்துள்ளது.
பிரபல பத்திரிகை நிறுவனம் நடத்திய, "2012ம் ஆண்டில், ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பிரபலம் என்ற கருத்து கணிப்பில், ஏழு லட்சம் ஓட்டுகளை வாங்கி, முதலிடத்தை பிடித்துள்ளார், தீபிகா. அவர் கூறுகையில்,"நேற்று மற்றொருவருக்கு சொந்தமானது, இன்று, எனக்கு சொந்தமாயிருக்கிறது. நாளை, வேறொருவருக்கு சொந்தமாகும். எனவே, இதற்காக, நான், ரொம்பவும் பெருமிதப்படவில்லை. அதேநேரத்தில், இந்த பெருமை, எனக்கு, ஒரே இரவில் கிடைத்து விடவில்லை. இதற்காக, கடந்த ஒரு ஆண்டாக, ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறேன் என்கிறார், தீபிகா. தீபிகாவுக்கு கிடைத்துள்ள இந்த செல்வாக்கால், பாலிவுட்டின் மற்ற, முன்னணி நடிகைகளான, கத்ரினாவும், கரீனாவும், கலக்கம் அடைந்துள்ளனர்