Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நம்பர் ஒன் அந்தஸ்தும் வேண்டாம்; பணமும் வேண்டாம்:சோனம் கபூர் தடாலடி

08 மே, 2013 - 02:14 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். "சாவரியா" என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர், இப்போது பாலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். தற்போது நம்மூர் தனுஷ் உடன் ராஞ்சனா என்ற படத்தில் ஜோடி போட்டுள்ள சோனம் கபூர், நம்மோடு பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள்...

* நீங்கள் அறிமுகமான  முதல் படம்,  சரியாக ஓடவில்லையே?

"சாவரியா என்ற படத்தில், ரண்பீர் கபூர் ஜோடியாக அறிமுகமானேன்.  அந்த படம், சரியாக ஓடாததில், வருத்தம் தான். ஆனால், அந்த படத்தில், என் நடிப்புக்கு, நல்ல விமர்சனங்கள் வந்தன. பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்ததால், முதல் படம் ஓடவில்லையே, என்ற கவலை, மறைந்து விட்டது.


* "ரஞ்சனா படத்தில், "கொலை வெறி புகழ் தனுசுடன் நடித்த அனுபவம்?

நான், வெள்ளித் திரைக்கு அடி எடுத்து வைத்து, ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தனுசுக்கு முன்னால் நடித்தபோது, ஒரு புதுமுக நடிகைக்கு ஏற்படுவது போன்ற அனுபவம் எனக்கு இருந்தது. அவர், ஒரு மிகச் சிறந்த நடிகர். என்னைவிட, நன்றாக நடிக்கிறார்.


* எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க விருப்பம்?

நம்பர் ஒன் என்ற அந்தஸ்தோ, பணமோ எனக்கு முக்கியமில்லை. நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும், சிறப்பான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. குறிப்பாக, எப்போதும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே, என் விருப்பம். அதற்கேற்ற, கேரக்டர்களில் நடக்க விரும்புகிறேன்.


* எத்தனை படங்களில்  நடிக்கிறீர்கள்?

இரண்டு படங்களில் நடிப்பதற்கு, கால்ஷீட் கொடுத்துள்ளேன். ஒரே நேரத்தில், இரண்டு படங்களில் நடிப்பதில், ஆர்வமில்லை. ஒரு படத்தை முடித்து விட்டு, அடுத்த படத்தில் நடிப்பதை தான், விரும்புகிறேன். அப்போது தான், கேரக்டரை, நம் மனதுக்குள் உள்வாங்கி, நடிப்பை, முகத்தில் பிரதிபலிக்க முடியும்.


* அனில் கபூரின் மகள் என்பது,  உங்களுக்கு பிளஸ் தானே?

கண்டிப்பாக, பிளஸ் தான். என் தந்தை, மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்பதில், பெருமைப்படுகிறேன். அதே நேரத்தில், அவர் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும், எனக்கு உள்ளது. அதற்கு தகுந்தபடி நடந்து கொள்வேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in