Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கிளாமர் குதிரையில் சவாரி செய்ய மாட்டேன்: நித்யா மேனன்

06 மே, 2013 - 04:02 IST
எழுத்தின் அளவு:

 வெப்பம், 180 போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். மலையாள வரவான இவருக்கு இந்த இரண்டு படங்களுக்கு அடுத்து தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனது தாய் மொழியான மலையாளத்திலேயே நடித்து வருகிறார். தற்போது அங்கு உள்ள முன்னணி நடிகைகளில் நித்யா மேனனும் ஒருவர். இப்போது ஜே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்த் ஜோடியாக நடித்துள்ள நித்யா மேனன் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* தமிழில் அதிகமாக  நடிப்பது இல்லையே ஏன்?

ஒரு ஆங்கில படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நான், தற்போது தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடிக்கிறேன். ஆனால், தமிழில் தான் குறைவான படங்களில் நடித்துள்ளேன். காரணம், என்னை, கவரக் கூடிய வகையிலான கதைகள், தமிழில் கிடைக்காதது தான்.

* எந்த மாதிரி கேரக்டர்களில்  ஈடுபாட்டுடன் நடிக்கிறீர்கள்?

குடும்பம், சென்டிமென்ட் கதைகளில் நடிக்கும் போது என்னையும் அறியாமல், அதிக ஈடுபாடு ஏற்படும். அந்த வகையில், என் தாய் மொழியான மலையாள படங்களே,  என் திறமைக்கு அதிக தீனி போட்டுள்ளன.

* படங்களை எந்த அடிப்படையில்  தேர்வு  செய்கிறீர்கள்?

படத்தின், ஹீரோ யார்? எத்தனை ஹீரோயின் என்றெல்லாம் பார்ப்பதில்லை. எனக்கான கேரக்டரில் நடிப்பதற்கு போதிய வாய்ப்பு இருந்தால், அந்த படங்களை நான் விடுவதில்லை.

* ஒரே நேரத்தில், பல மொழிப்   படங்களில் நடிப்பது சிரமமா?

கலைக்கு, மொழி ஒரு தடையே இல்லை. எந்த மொழிப்படமாக இருந்தாலும், காட்சிகளுக்கு தேவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன். இதில், எனக்கு எந்த சிரமமும் இதுவரை ஏற்பட்டதில்லை.

* கமர்சியல் குதிரையில்   சவாரி செய்யாதது ஏன்?

என்னை கமர்சியல் நடிகையாக்கும் முயற்சியில், சில இயக்குனர்கள் இறங்கினர். நான், அதற்கு உடன் படவில்லை. அத்துடன், என் உடல் அமைப்பும், முக அமைப்பும், குடும்ப பாங்கான வேடங்களுக்கே பொருந்துகின்றன. இதனால், கிளாமராக நடிக்க விருப்பமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

komala - Thoothukudi,இந்தியா
06 ஜூலை, 2013 - 13:47 Report Abuse
komala super Heroine
Rate this:
Venkatesh R Venkatesh - Dammam,சவுதி அரேபியா
10 மே, 2013 - 22:09 Report Abuse
Venkatesh R Venkatesh "தமிழில் தான் குறைவான படங்களில் நடித்துள்ளேன். காரணம், என்னை, கவரக் கூடிய வகையிலான கதைகள், தமிழில் கிடைக்காதது தான்" - தமிழ்ல சான்ஸ் கிடைக்கலேன்னு சொல்லு, அப்புறம் மலையாளத்தில் முன்னாடியே கவர்ச்சியா நடிச்சிருக்கியே இது என்ன புது டயலாக்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
06 மே, 2013 - 08:38 Report Abuse
itashokkumar நீ எத்தனை படங்களில் அக்குள் தெரிய நடித்து இருக்கிறாய் என்பது உனக்கு தெரியாதா. அந்த லிஸ்டை நான் தந்தாள் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு இட்லி சுட்டு வியாபாரம் செய்ய தயாரா?
Rate this:
aloprecha - Hyderabad,இந்தியா
06 மே, 2013 - 16:27Report Abuse
aloprechaஅக்குள் எல்லாம் கிளாமர் என கிளர்ச்சி அடைபவர்களிடம் பாவம் நித்யா மேனன் என்ன பேசமுடியும்...
Rate this:
sent - chennai  ( Posted via: Dinamalar Windows App )
06 மே, 2013 - 07:30 Report Abuse
sent everybodies tells the same in intial, later its turn around 180deg.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in