ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹாலிவுட்டின் முன்னணி நடிகை, ஏஞ்சலினா ஜோலியின் தற்போதைய காதலர், பிரபல ஹாலிவுட் நடிகர், பிராட் பிட். இவருக்கு, இந்திய உணவகங்களில் தயாராகும், சிக்கன் குருமா, சிக்கன் டிக்கா ஆகியவற்றின் மீது, அலாதி பிரியம். லண்டனுக்கு வந்தால், அங்குள்ள இந்திய உணவகங்களுக்கு சென்று, சிக்கன் வகையறாக்களை, ஒரு பிடி பிடிப்பது, இவரது வழக்கம். ஆனால், தொடர் படப் பிடிப்புகள் காரணமாக, நீண்ட நாட்களாக, அமெரிக்காவிலேயே இருப்பதால், இந்திய சிக்கன்களை சாப்பிடாமல், பிராட்டுக்கு, ஏக்கமாகி விட்டதாம்.வேறு ஒரு வேலையாக, சமீபத்தில் லண்டனுக்கு வந்திருந்த, ஏஞ்சலினா ஜோலி, அங்குள்ள, பிரபலமான இந்திய உணவகத்துக்கு சென்று, சிக்கன் அயிட்டங்களை வாங்கி, பதமாக பேக்கிங் செய்து, அவற்றை அமெரிக்காவில் உள்ள, பிராட் பிட்டுக்கு, விமானத்தில் அனுப்பி வைத்தார்.
ஏஞ்சலினாவின் இந்த உபசரிப்பை பார்த்து, அவர் மீதான பாசம், பிராட் பிட்டுக்கு, மேலும் அதிகரித்து விட்டதாம்.