இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் மிஸ் யுனிவர்சுமான, சுஷ்மிதா சென்னுக்கு, இப்போது, பட வாய்ப்புகள் எதுவும், பெரிய அளவில் இல்லை. "டிவி சேனல்களில், நிகழ்ச்சி தொகுப்பாளராக பங்கேற்கிறார். இவரும், பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரருமான, வாசிம் அக்ரமும், காதலிப்பதாகவும், இருவரும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், செய்திகள் வெளியாகின. இதைப் பார்த்து டென்ஷனான சுஷ்மிதா, "யார் தான், இப்படி பொய் தகவல்களை பரப்புகின்றனரோ தெரியவில்லை. நானும், அக்ரமும், நல்ல நண்பர்கள்; அவ்வளவு தான். மற்றபடி, காதல், திருமணம் என்பதெல்லாம், உல்டா என, ஆவேசப்பட்டுள்ளார்.வாசிம் அக்ரமும், "என் மனைவி, ஹூமா, உடல் நலக் குறைவால் இறந்து விட்டார். மீதமுள்ள என் வாழ் நாட்களை, என் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன். யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. சுஷ்மிதாவுக்கும், எனக்கும், நல்ல நட்பு உள்ளது. அதை, காதல் என கூறி, அந்த நட்பை கெடுத்து விட வேண்டாம் என, கவலையுடன் கூறுகிறார்.