‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
" தி டர்ட்டி பிக்சர், கஹானி ஆகிய படங்களின் வெற்றி, வித்யா பாலனை, உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது. அதிலும், "தி தர்ட்டி பிக்சர் படத்துக்காக, தேசிய விருது கிடைத்ததை அடுத்து, அவருக்கான பொறுப்புணர்ச்சியும் அதிகரித்து விட்டது. இதனால், தான், அடுத்து நடிக்கும் படங்களில், தன் கேரக்டர் எப்படிப் பட்டது? நடிப்பு திறமையை வெளிப்படுத்த, வாய்ப்புள்ள கேரக்டரா என்பதையெல்லாம், அலசி ஆராய்ந்து தான், படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். இதுகுறித்து, சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், "நான், 35 வயதை கடந்து விட்டேன். இனியும், காதலி வேடத்தில், ஹீரோவுடன் சேர்ந்து, மரத்தை சுற்றி, டூயட் பாடுவது நன்றாக இருக்காது. படங்களில், காதலித்து, காதலித்து போரடித்து விட்டது. எனவே, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை மட்டுமே, தேர்வு செய்து நடிப்பது என, முடிவு செய்திருக்கிறேன் என, கூறியுள்ளார்.