Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என் படத்தை நாலு பேர் பார்ப்பதே பெரிய விஷயம்...! டைரக்டர் குகன் சுவாரஸ்யம்

17 மார், 2013 - 16:55 IST
எழுத்தின் அளவு:

 மதுரையின் வீதிகளில் சுற்றித் திரிந்த புகைப்பட  கலைஞர், வீடியோ கலைஞர், "மதுரை - தேனி, வழி ஆண்டிபட்டி படத்தின் இயக்குனர், "சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி படத்தின் ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர். தற்போது "முயல் படத்தை இயக்கி வரும் எஸ்.பி.எஸ்.குகன், மதுரை மண்ணுக்கு சொந்தக்காரர். கல்லூரி மாணவன் போன்ற தோற்றம்... வார்த்தைக்கு வார்த்தை சிரிப்பு, கலாட்டா... என, பேட்டியை கலகலப்பாக்கினார், குகன்.

* அனுபவமில்லாமல் படம் எடுக்கும் போது கஷ்டமா இல்லையா?


மதுரை யாதவர் கல்லூரியில் "டிகிரி சேர்ந்து, நாலு மாசத்துல வெளியே வந்தேன். புகைப்பட ஆர்வம் இருந்ததால, சென்னையில் வந்து  சினிமாட்டோகிராபி, பிலிம் டெக்னாலஜி படிச்சேன். விளம்பரப் படங்கள் பண்ணினேன். எங்கெல்லாம் "சூட்டிங் நடக்குதோ, அங்க உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன். அதுல கத்துக்கிட்ட அனுபவத்தை வச்சு, படம் பண்ண முடிவு செஞ்சேன். பிறக்கும் போதே, நீ "டெக்னீசியனா... லாரி டிரைவரா... இயக்குனரா இருனு, கடவுள் "நோட்ஸ் எழுதல. சினிமா எனது முயற்சிக்கு கிடைத்த முதல் படி.

* உங்களை நம்பி பணம் போட்டவங்க யாருங்க?

அது பெரிய கதை. எந்தச் சூழ்நிலையிலும், மத்தவங்கள அழவச்சு, என்னையும் அழ வைக்கற "சீரியல் மட்டும் எடுக்கக் கூடாதுனு, சபதத்தோட சென்னை வந்தேன். சென்னையில் நண்பர்களோட இருந்தப்போ, விமல்னு ஒருத்தர் சுவிட்சர்லாந்தில் இருந்து சென்னைக்கு "சீரியல் எடுக்க வந்தார். அவரை "சீரியல் எடுக்காதீங்க, கதைய கேளுங்கனு சொல்லி, படத்துக்கு தயாரிப்பாளர் ஆக்கினேன்.

* முதல் பட அனுபவம் கை கொடுத்ததா? கையை கடித்ததா?

மதுரை - தேனி "ரூட்டில் நாலு கிலோமீட்டருக்கு ஒரு இடம் வீதம், ரோட்டில் "சூட்டிங் நடத்த அனுமதி வாங்கியிருந்தேன். பஸ்சுக்குள்ள, முக்காவாசி கதை நடக்கும். அந்த ஏரியா ஜனங்க 32 பேரை, பஸ்சில உட்கார வச்சு மதுரை - தேனிக்கு, தொடர்ந்து 18 நாட்கள்  "சூட்டிங் நடத்தினோம். "சூட்டிங் முடியும் போது, அவங்க போட்டிருந்த "டிரஸை வாங்கிட்டு, மறுநாள் திரும்பவும் தருவோம். அவங்களே நொந்து போய்ட்டாங்க. ரொம்ப செலவாகலை. லோ "பட்ஜெட் படம் தான்.

* படத்துக்கு வரவேற்பு இருந்ததா?

படத்தை மத்தவங்க பாராட்டணும்னு பேராசைப்படல. "ஸ்கிரீன்ல என் பேரை பார்க்கத் தான் ஆசை. செப்.,18 "ரிலீஸ் தேதி. அன்னைக்கு தான், கமல் சாரோட "உன்னைப் போல் ஒருவன் படமும் "ரிலீஸ் ஆச்சு. தமிழகத்துல 10 தியேட்டர் கிடைச்சதே பெரிய விஷயம். மதுரை மினிப்ரியா தியேட்டர்ல,  இன்னொரு படம் வரத் தாமதம் ஆனதால, ஒரு வாரத்துக்கு மட்டும் ஓட்டுவேனு சொல்லி, படம் வாங்கினாங்க. 4ம் நாள் "பிக்கப் ஆகி, தொடர்ந்து 25 நாள் ஓடுச்சு. என் படத்தை நாலு பேர் பார்த்தேன்னு சொன்னாலே, நான் சந்தோஷப்படுவேன்.

* சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி படத்தின் ஒளிப்பதிவுக்கு உலகளவில் மரியாதை கிடைத்ததாமே
?

மதுரை - தேனி படமும் டிஜிட்டல் கேமராவில் எடுத்தது தான். "சனிக்கிழமை படத்தை "ஸ்டில் கேமராவில் (எச்.டி., எஸ்.எல்.ஆர்.,) எடுத்தேன். படம் "ரிலீஸ் பண்றதுக்கு முன்னால, சென்னையில் நடந்த "பிரஸ் மீட்டில் சொன்னப்போ, யாருமே நம்பல. என் நண்பர், இணையதளத்தில் இதுமாதிரி வேறு யாரும் படம் எடுத்தாங்களானு தேட ஆரம்பிச்சார். ஆறுமாத தேடலில் பார்த்தா... உலகத்துலேயே இந்த கேமரா மூலம் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட முதல் படம் இதுதானு சொன்னாங்க. லிம்கா உலக சாதனை சான்றிதழ் தந்தாங்க.

* இந்த படத்தில், தாஜ்மகாலை முழுமையாக பதிவு செய்தது எப்படி?


கேட்டா சிரிப்பீங்க. "திருடுகிறாய் பாட்டுக்கு தாஜ்மகாலில் படம் எடுக்க முடிவு செஞ்சேன். "யூனிட் ஆளுங்க எல்லோரும் போனோம். என்கிட்ட சாதாரண கேமரா இருந்ததால, அதுக்கு 50 ரூபாய் கட்டணம் மட்டும் வாங்கினாங்க. உள்ளே ஹீரோ, ஹீரோயினை கேமரா பார்க்காமல் இயல்பாக நடிக்கச் சொல்லி, உட்பகுதி வரை சுற்றிப் பார்ப்பது போல படம் பிடித்தோம். படம் வெளிவந்தப்ப, மத்த இயக்குனர்களே பாராட்டினாங்க.

* தற்போதைய முயற்சி?

5000 தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து, "முயல்னு படம் இயக்கிட்டு இருக்கேன். முயற்சி செய்வதைப் பற்றிய படம் இது. என்னுடன்  இணைபவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்.  என்னைப் போல, அவர்களும் சினிமா களத்தில் நிற்கலாம். இந்தப் படமும் வித்தியாசமா பேசப்படும். சத்தியமா... தமிழ் சினிமாவை புரட்டிப் போடும் எண்ணமெல்லாம் இல்லீங்க.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
25 மார், 2013 - 10:11 Report Abuse
prabu.usa@gmail.com முதல்ல படத்துக்கு அழகா பேரு வைக்க கத்துக்கோ...
Rate this:
Radhakrishnan - Coimbatore,இந்தியா
18 மார், 2013 - 19:46 Report Abuse
Radhakrishnan வாழ்த்துக்கள் தலைவா ?
Rate this:
radhakrishnan - karur  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 20:54 Report Abuse
radhakrishnan super சூப்பர்
Rate this:
17 மார், 2013 - 18:41 Report Abuse
சதீஷ் வரன் உண்மையிலேயே இவரோட முயற்சியை பாராட்ட வேண்டும்
Rate this:
அரசன் - madurai  ( Posted via: Dinamalar Android App )
17 மார், 2013 - 18:38 Report Abuse
அரசன் இயல்பான சுவாரஸ்ய மனிதர்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in