'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
பாகிஸ்தானை சேர்ந்த நடிகை, வீணா மாலிக் நடித்துள்ள படம் இது. இவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்கி, பிரபலமானவர். இதனால், அவர் நடித்துள்ள இந்த படத்துக்கு, பாலிவுட்டின் இளம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு குடும்ப பெண், ஒரு துணை நடிகை, விபசார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் ஆகிய மூன்று பேரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான், இந்த படம். இதில், விலை மாது கேரக்டரில், வீணா மாலிக் நடித்துள்ளார்.
படத்தின் இயக்குனர், ராஜிவ் எஸ் ருயா கூறுகையில்,"சாதாரண மக்கள் எந்த விஷயத்துக்கு ஆசைப்படுகிறார்களோ, அதை மையமாக வைத்து தான், திரைக்கதை அமைத்துள்ளோம். அதனால், இந்த படம், பாலிவுட் ரசிகர்களின் மனதில் கட்டாயம் இடம் பெறும் என்கிறார். வீணா மாலிக் தவிர, ரியா சென், ராஜன் வர்மா, சுப்ரியா உள்ளிட்டோரும், இந்த படத்தில் நடித்துள்ளனர்.