தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மும்பையைச்சேர்ந்த தமன்னா புகழ் பெற்றது என்னவோ ஆந்திராவில்தான். அதையடுத்து தமிழிலும் புகழ் கொடி நாட்டினார். அவர் நடித்த படங்களில் கவர்ச்சிக்கு எந்த குறையும் வைத்ததில்லை. அதனால் தமிழை விட தெலுங்கு சினிமா அவருக்கு படங்களையும், சம்பளத்தையும் வாரி வாரி கொடுத்தது. இதனால் போதும் போதும் என்கிற அளவுக்கு படுகவர்ச்சியாக நடித்து ஆந்திர ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார் தமன்னா. அதனால் தமன்னாவுக்கென்று பெரிய அளவில் ரசிகர் வட்டம் உருவாகி, அவர் நடித்த படங்களை பார்க்க வெறிகொண்டு நின்றார்கள்.
இந்த நேரத்தில், தமன்னாவின் தாய்மொழியான இந்தியில் இருந்து அவருக்கு ஹிம்மத்வாலா என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அஜய்தேவ்கான் ஹீரோ என்பதால், தாய்மொழியில் என்ட்ரி கொடுக்க இதுதான் சரியான தருணம் என்று எகிறி குதித்தார் தமன்னா. முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட வேண்டும் என்று அங்குள்ள கவர்ச்சி கதாநாயகிகளே மிரண்டு போகும் அளவுக்கு அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி நடித்துள்ளாராம் தமன்னா. அதைப்பார்த்து இப்போது அக்சய்குமார் நடிக்கும் படமொன்றும் தமன்னாவுக்கு கமிட்டாகி விட்டதாம். அதனால் ஹிம்மத்வாலாவை முடித்து விட்டு தென்னிந்தியாவுக்கு வந்து விடுவேன் என்று சொல்லி வந்த தமன்னா, இப்போது அடுத்தடுத்து படங்கள் புக்காகி விட்டதால், இனி பாலிவுட்டுக்குத்தான் முதலிடம் கொடுக்கப்போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். தமிழில்கூட சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் படத்திற்கு பிறகு எந்த படத்திலும கமிட்டாகவில்லை தமன்னா.