‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அக்ஷய் குமாருடன் நடித்த,"ஸ்பெஷல் 26 படத்துக்கு வரவேற்புகிடைத்துள்ளதால், சந்தோஷத்தில் மிதக்கிறார், காஜல் அகர்வால்."இந்தி படத்தில் நடிப்பதற்கும், தமிழ், தெலுங்கு போன்ற, தென் மாநில மொழி படங்களில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் என, அவரிடம்கேட்டபோது," பெரிய வித்தியாசம் இல்லை.
தென் மாநில மொழி படங்களில்நடித்ததன் மூலம், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். என் கேரியருக்கு, இந்த விஷயங்கள், மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார். மேலும், "ஒரே நேரத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. மாலை, 6:00 மணிக்கு மேல், படப்பிடிப்பில்பங்கேற்பது, ரொம்பவும் சிரமமாக உள்ளது. படப் பிடிப்பு இல்லாத நேரங்களில், குடும்பத்தினருடன் ஜாலியாக பொழுதை கழிப்பேன். பார்ட்டிகளுக்கு செல்வதில், ஆர்வம் இல்லை என்கிறார், காஜல் அகர்வால்.