Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சீதையாக நயன்தாரா நடிக்கும்போதும் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நான் நடிக்க கூடாது! வித்யாபாலன் கேள்வி?

24 பிப், 2013 - 12:42 IST
எழுத்தின் அளவு:

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான படம் தி டர்ட்டி பிக்சர்ஸ். இந்த படத்தில் சில்க் வேடத்தில் நடித்திருந்தார் வித்யாபாலன். அதில் சிறப்பாக நடித்தமைக்காக அவருக்கு கடந்த ஆண்டின் சிறந்த நடிகைகான தேசிய விருதுகூட கிடைத்தது. இதனால் ஆபாசமாக நடித்திருக்கிறார் என்று வித்யாபாலனை விமர்சித்து வந்தவர்கள்கூட அதன்பிறகு வாயடைத்து போயினர். இந்நிலையில், தற்போது கர்நாடக இசைப்பாடகியான எம்எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜீவ்மேனன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் வித்யாபாலன். இதற்கும் வழக்கம்போலவே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் கடுப்பான வித்யாபாலன், ஒருவரது வாழ்க்கை வரலாறை படமாக்க நினைக்கும்போது, அதற்கு பொருத்தமான நடிகையைத்தான் இயக்குனர்கள் தேர்வு செய்வார்கள். அதிலும் நான் சில்க் வேடத்தில் சிறப்பாக நடித்ததால், அந்த நம்பிக்கையில் இந்த வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இதில் நான் நடிக்கக்க்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. கோடான கோடி எம்எஸ்.சுப்புலட்சுமியின் ரசிகைகளில் நானும் ஒருத்தி என்று கூறியிருக்கிறார்.

மேலும், எத்தனையோ நடிகைகள் தெய்வங்களின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அவர்களை மட்டுமே ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை. நயன்தாராகூட ஒரு தெலுங்கு படத்தில் சீதையாக நடித்திருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு கிறிஸ்தவ பெண். ஆனால் அதை யாரும் எதிர்க்கவில்லையே. மாறாக, ஏற்றுக்கொண்டார்களே. அப்படியிருக்க, நான் ஏன் எம்.எஸ் வேடத்தில் நடிக்கக்கூடாது என்றும் கேள்வி கேட்டுள்ளார் வித்யாபாலன்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

itashokkumar - Trichy,இந்தியா
23 மார், 2013 - 13:10 Report Abuse
itashokkumar நீங்க வேற பிரபு தேவாவை "ராமராக " நடிக்க வைக்காமல் இருந்தார்களே. கடவுளே உன்னை நீயே காபற்றி கொள்வீராக.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
25 பிப், 2013 - 10:52 Report Abuse
Vaal Payyan நாக்க புடிங்கிக்குற மாதிரி கேக்கறது .. இது தாண்டா கேள்வி ...
Rate this:
pugal - Salem,இந்தியா
25 பிப், 2013 - 06:42 Report Abuse
pugal ரொம்ப சரி கண்ணு, நீ கவலபடாம நடி. கந்து வட்டிக்கு கடன வாங்கியாவது நான் போஸ்டர் அடிச்சு ஓட்டுறேன்.
Rate this:
Pavithran - kuala lumpur  ( Posted via: Dinamalar Android App )
24 பிப், 2013 - 20:19 Report Abuse
Pavithran There is nothing wrong in it... Just allow her to do the film
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
24 பிப், 2013 - 18:53 Report Abuse
kumaresan.m "சரியான கேள்விதான் இதில் தவறேதும் இல்லை ,நடிப்பு என்பது ஒரு தொழில் இதனில் மத சாயம் பூசக்கூடாது "
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in