சென்னை அபிராமியில் 7டி தியேட்டர் திறப்பு | கிரிக்கெட் சூதாட்டம் : இந்தி நடிகர் கைது | வீடு திரும்பினார் டி.எம்.எஸ்! | சிங்கம்-2 ஆடியோ ரிலீஸ்: ஜூன் 2ம் தேதிக்கு மாற்றம் | கால் கேர்ள் ஆக நடிப்பது ஏன்? சார்மி விளக்கம்!! | குஷ்பூவின் சமூக அக்கறை! | லட்சுமிராயை துரத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள்! | சோனியா அகர்வாலின் சைடு பிஸ்னஸ்! | சைவத்துக்கு மாறினார் சிம்பு! | பேஸ்புக்கில் கடலை போடும் சர்வானந்த்! |
முருகதாஸ் இந்தியில் இயக்கி வரும் துப்பாக்கி படத்தின் ஹீரோ அக்ஷ்ய் குமாருக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய்-காஜல் அகர்வால் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான படம் துப்பாக்கி. இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, 100நாட்களையும் கடந்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய், முருகதாஸ் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமும் இது தான்.
இந்நிலையில் தமிழில் ஹிட்டடித்த துப்பாக்கியை இந்தியில் ரீ-மேக் செய்து வருகிறார் முருகதாஸ். இதில் ஹீரோவாக அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே முருகதாஸ்க்கு இந்தியில் நல்ல பெயர் இருப்பதாலும், அக்ஷ்ய் குமாரின் சமீபத்திய படங்கள் அனைத்தும் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்து இருப்பதாலும் இந்தப்படத்திற்கு அவருக்கு இதுவரை வழங்கப்படாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது எவ்வளவு சம்பளம் என்று விசாரித்து பார்த்ததில் சுமார் ரூ.50 கோடியாம். தமிழ் துப்பாக்கி படத்தின் மொத்த பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் சம்பளம் இந்தி துப்பாக்கிக்காக அக்ஷ்ய் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அக்ஷ்ய் குமாருக்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா என்று முருகதாஸிடம் கேட்டால் அவரது சம்பளம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று கூறியுள்ளார் முருகதாஸ்.