'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலகையே கலக்கி எடுத்த கொலவெறி மற்றும் கங்கனம் ஸ்டைல் பாடல்களில் தனக்கு கொலவெறி பாடல் தான் ரொம்ப பிடிக்கும் என்று பாலிவுட் நடிகை சோனம் கபூர் கூறியுள்ளார். கொலவெறி பாடல் மூலம் உலகம் முழுக்க பிரபலமான நடிகர் தனுஷ், முதன்முறையாக பாலிவுட்டில் ராஞ்சனா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனந்த் எல்.ராய் இயக்கும் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனம் கபூர், தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் தனக்கும் ரொம்ப பிடிக்கும் என்றும், உலகையே கலக்கிய கங்கனம் ஸ்டைல் பாடலை காட்டிலும் கொலைவெறி தன்னை ரொம்ப கவர்ந்ததாகவும், இதுபோன்ற பாடல்களே தனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.