கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும் வித்யா பாலன் |

சத்ருகன் சின்காவின் மகள், சோனாக்ஷி சின்கா, பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான், பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால், இவர் நடித்த, "ரவுடி ரத்தோர், டபாங் 2 ஆகிய படங்கள், இவரை பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் வரிசையில், கொண்டு வந்து விட்டு விட்டன. பாலிவுட் ரசிகர்களின் செல்லமாகவும் மாறி விட்டதால், உற்சாகத்தில், தலை கால் புரியவில்லை, சோனாக்ஷிக்கு. சமீபத்தில், சல்மான் கான் ஜோடியாக, ஒரு படத்தில் நடிக்க, தயாரிப்பாளர் அவரை அணுகியபோது, எக்குத் தப்பாக, சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அலறடித்தாராம்.இந்த நேரம் பார்த்து, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடிப்பதற்கு, அவரிடம் கால்ஷீட்கேட்டுள்ளார். அதற்கு சோனாக்ஷி," அதற்கென்ன நடித்தால் போயிற்று. ஆனால், ஐந்து கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து விடுங்கள் என, கூறியுள்ளார். வேறு வழியின்றி, சம்மதித்தாராம் தயாரிப்பாளர். தென் மாநிலங்களை பொறுத்தவரை, நடிகைகளின் அதிகபட்ச சம்பளம், 1.5 கோடி ரூபாய் தான்.இந்த ரெக்கார்டை உடைத்து, சுக்கு நூறாக்கியுள்ளார், சோனாக்ஷி.