'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள், லட்சுமி மஞ்சு, பன்முக திறமை உடையவர். "டிவி சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, திரைப்பட தயாரிப்பாளர் என, பல்வேறு துறைகளிலும், பிரபலமாக விளங்குகிறார். தமிழில், "கடல் படத்துக்கு பின், "மறந்தேன் மன்னித்தேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில், "டிவி சேனல் ஒன்றில் நடந்த, நடன நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த லட்சுமி மஞ்சு,"நாம், பல்வேறு பாடல்களை கேட்டிருக்கிறோம். பல்வேறு நடனங்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், குத்துப் பாடல்களை பாடுவதும், அதற்கு ஆடுவதும், மிகவும் சிரமமான காரியம். அதை, சாதாரணமாக கருத முடியாது. இதனால், எனக்கு, குத்துப் பாடல்கள் தான், மிகவும்பிடிக்கும் என, வெளிப்படையாக பேசினாராம்.பொதுவாக, குத்துப் பாடல்களா என, முகத்தை சுளிப்பவர்களுக்கு மத்தியில், லட்சுமி மஞ்சு, இவ்வாறு கூறியிருப்பது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.