'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கற்பழிப்பு என்பது எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு செக்ஸ்(சர்ப்ரைஸ் செக்ஸ்) என்று பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ட்டுவிட் செய்து இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதனை தான் ட்டுவிட் செய்யவில்லை என்று மறுத்துள்ளார் சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கனடா நாட்டு நடிகை சன்னி லியோன். அதன்பிறகு பாலிவுட்டில் கவர்ச்சி குயினாக களம் இறங்கினார். ஜிஸ்சம்-2 வில் அறிமுகமான சன்னி லியோன் தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களில் நடித்து வருகிறார். நிர்வாணம் என்பது எல்லாம் இவருக்கும் ரொம்ப சாதாரணம்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சன்னி லியோன் தனது ட்டுவிட்டரில் கற்பழிப்பு சம்பவம் என்பது குற்றம் கிடையாது, எதிர்பாராமல் கிடைக்கும் செக்ஸ் என்று கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே அதனை எடுத்துவிட்டார். டில்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்துள்ள நிலையில், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகையில் சன்னி லியோன் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் தான் அப்படி ஒரு கருத்தை ட்டுவிட் செய்யவே இல்லை என்றும், என்னுடைய ட்டுவிட்டர் பக்கத்தில் மர்மநபர் யாரோ ஊடுருவி இந்த கருத்தை பதிவு செய்ததாகவும், எனது பக்கத்தில் இப்படி ஒரு கருத்து வந்த உடன் அதை உடனே எடுத்துவிட்டேன். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்துள்ளேன் என்று சன்னி லியோன் கூறியுள்ளார்.