‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஜீனத் அமன் தனது 61வயதில் இன்னொரு திருமணம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார். 1970ம் ஆண்டு மிஸ் ஆசியா பட்டம் பெற்று, மாடலிங்கில் நுழைந்து பிறகு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ஜீனத் அமன். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். 1970-80களில் பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த ஜீனத் அமன், மசார் கான் என்பவரை கடந்த 1985-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 1998-ம் ஆண்டு மசார் கான் மரணம் அடைந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்களுடன் வசித்து வந்த ஜீனத் அமன் தற்போது மறுமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஜீனத் அமன், தனது கணவர் இறந்த பின்னர் மறுமணம் பற்றி சிந்திக்காமல், குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். சமீபத்தில் நான் சந்தித்த ஒருவர் என் மனதை கவர்ந்துவிட்டார். அவரை திருமணம் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். இதற்கு எனது பிள்ளைகளும் சம்மதம் தெரிவித்துவிட்டனர். அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
மறுமணம் செய்ய முடிவெடுத்து இருக்கும் ஜீனத் அமனுக்கு தற்போது 61வயது என்பது குறிப்பிடத்தக்கது.