நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
நடிகை வித்யாபாலனுக்கு குட்டி மாதுரி தீட்சித் என பெயரெடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். டர்ட்டி பிக்சர்ஸ் இந்தி படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் வித்யாபாலன். இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. வித்யாபாலனுக்கும் டெலிவிஷன் நிறுவன நிர்வாகி சித்தார்த்துக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் வித்யாபாலன் அளித்துள்ள பேட்டியொன்றில், சித்தார்த் என் படத்துக்கு தயாரிப்பாளராக இருந்தபோது நாங்கள் காதலிக்கவில்லை. முதலில் விருது வழங்கும் விழா ஒன்றில் அறிமுகமானோம். அவர் தயாரித்த படத்தில் நடித்த போது எங்களுக்குள் காதல் இல்லை. அதன் பிறகு நெருக்கமானார். சித்தார்த்தை மணந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறேன். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. எனக்கு குட்டி மாதுரி தீட்சித் என பெயர் வாங்க ஆசை, என்று கூறியுள்ளார்.