பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷாருக் பற்றிய சர்ச்சை குறித்து நடிகை ப்ரியங்கா பேட்டியளித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன் மை சிட்டி என்ற வீடியோ வெளியீட்டு விழாவில் நிருபர்களிடம் கூறும்போது, ஷாருக் கான், தான் ஒரு முஸ்லிம் ஆக இருப்பதால் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து கூறிய கருத்துகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. எனினும், ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களை பொதுமக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். அத்தகைய பிரபலங்கள் தற்போது எளிதான இலக்காக அவர்களுக்கு உள்ளனர் என்றார்.
பிரியங்காவிடம் அவரது பெயரின் பின்னால் கான் என இருந்தால் சர்ச்சைகளில் அதிகமாக சிக்கியிருப்பீர்கள் அல்லவா என்று கேட்கப்பட்டதற்கு பதில் அளித்து பேசும்போது, சோப்ரா என்ற பெயராலேயே அதிக சர்ச்சைகள் எழுந்தன. ஒன்றுமில்லாத விசயத்தில் இருந்து மிக பெரிய காரியங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் இருந்து கொண்டு இத்தகைய கேள்வியை கேட்பது வெட்கக்கேடானது என்று பதிலளித்தார்.