Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

நான் பாதுகாப்பாக உள்ளேன்! வாய் திறந்தார் ஷாருக்கான்

I am safe in india says sharukh khan
இந்தியாவில் நான் பாதுகாப்பாக உள்ளேன்; யாருடைய, தேவையற்ற ஆலோசனையும் எனக்கு தேவையில்லை, என, பாலிவுட் நடிகர், ஷாருக் கான் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றில், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் குறித்து கட்டுரை எழுதிய நடிகர் ஷாருக் கான், "பிரபலமான நபராக இருந்த போதிலும், முஸ்லிம் என்பதால், தான் அவ்வப்போது, அரசியல் கட்சிகளால் மிரட்டப்பட்டேன்; என் தந்தை சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் என்ற நிலையிலும், என்னை பாகிஸ்தானுக்கு விரட்ட சிலர் முயன்றனர் என எழுதியிருந்தார்.அவருக்கு ஆதரவு தெரிவித்து, பாகிஸ்தானின், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவன், ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ரகுமான் மாலிக் ஆகியோர் குரல் கொடுத்தனர். அந்த அண்டை நாட்டு ஆதரவு குரல்களுக்கு, இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம், ஒரு வாரமாக நடந்து வந்த போதிலும், வாய் திறக்காமல், மவுனியாக இருந்த நடிகர் ஷாருக் கான், நேற்று வாய் திறந்தார்.

மும்பையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:நான் இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளேன்; யாருடைய, தேவையற்ற ஆலோசனையும், ஆதரவும் எனக்கு தேவையில்லை. என் நாட்டில் உள்ள ஜனநாயகம், எனக்கு சுதந்திரமான மதச்சார்பற்ற வாழ்க்கையை மேற்கொள்ள அனுமதிக்கிறது.இந்த குழப்பம் ஏன் ஏற்பட்டது என்று எனக்கு தெரியவில்லை.

நான் சில மதவாத சக்திகளை பற்றி தான் குறிப்பிட்டிருந்தேன். அதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என குறிப்பிடவே இல்லை.கடந்த, 20 ஆண்டுகளாக, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் என்னை ஆராதித்து வருகிறார்கள். எனக்கு இந்தியாவில் எந்த பிரச்னையும் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags »
sharukh khan, ஷாரூக்கான்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

குட்டி - chennai,இந்தியா
2013-01-31 21:11:25 Report Abuse
 குட்டி இத மொதலயெ சொல்லி தொலைக்கலாம் இல்லே..
Rate this:
1 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in