கடல் கடந்து உத்தியோகம்: ராஜ் டிவியில் புதிய தொடர் | சினிமாவாகிறது உடுமலைப்பேட்டை சங்கர் கொலை சம்பவம் | புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம் | 22 ஐ.பி.எல் வீரர்களுக்கு பதிலாக 234 எம்.எல்.ஏக்களை எதிர்த்து போராடியிருக்க வேண்டும்: கமல் பேச்சு | காட்டேரி படப்பிடிப்பு தொடங்கியது | பா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ் | மகேஷ்பாபு படத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரகுல்பிரீத் சிங் | பிக்பாஸ் சீசன்-2, நானிக்கு 3.5கோடி சம்பளம் | கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, ஸ்ரீரெட்டி கொடுத்த ஐடியா | ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் |
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகி, ஆஷா போஸ்லே, முதல் முறையாக, இந்த படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமாகிறார். நாட்டில் உள்ள, ஒவ்வொரு குடும்பங்களிலு<ம் நடக்கும், சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, இந்த படம்.படத்தின் கதை குறித்து, இயக்குனர் மகேஷ் கொடியால் கூறுகையில்,"வயதான பெண்மணி ஒருவருக்கும், அவரது நான்கு பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும், உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் தான், படத்தின் கதை. நான்கு பிள்ளைகளில், மூன்று பிள்ளைகள், தங்கள் தாயாரை கைவிட்ட நிலையில், மூத்த மகள் மட்டும், அவரை அரவணைக்கிறார். இதற்கு, அவரது கணவரும், மகளும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்கு, கடும் முயற்சிகளை, அவர் மேற்கொள்கிறார். இதைத் தான், அனைவரும் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளோம் என்கிறார்.