Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

"லோக்பால்

Lokpal - coming soonகடந்தாண்டு, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, "லோக்பால் என்ற வார்த்தையை, தன் படத்துக்கு தலைப்பாக வைத்து, மலையாள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார், ஜோஷி. இந்த படத்தில், மோகன் லால், ஒரு ஓட்டல் முதலாளியாக நடிக்கிறார். சமையல் கலையில், மிகவும் புகழ்பெற்றவர். இவருக்கு இந்த படத்தில், மற்றொரு முகமும் உண்டு. ஊழல் எங்கு நடந்தாலும், அங்கு தவறாமல் ஆஜராகி, தட்டிக்  கேட்பார். "லோக்பால் என, பெயர் வைத்துள்ளதால், இந்த படம் முழுக்க முழுக்க, ஊழலுக்கு எதிரான விஷயங்கள் உள்ள, சமூக படம் என, நினைத்து விட வேண்டாம். காமெடியும், ஆக்ஷனும், சம விகிதத்தில் கலந்த, ஜனரஞ்சகமான படம் என, உத்தரவாதம் அளிக்கிறார், இயக்குனர், ஜோஷி. இந்த படத்தின் மூலம், காவ்யா மாதவன், தன் அடுத்த இன்னிங்சை துவக்கியுள்ளார். மீரா நந்தன், மனோஜ் கே ஜெயன், தம்பி ராமய்யா, தலைவாசல் விஜய், உள்ளிட்டோரும், இதில் நடித்துள்ளனர்.

Tags »
Lokpal
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in