Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » பாலிவுட் செய்திகள் »

"வயதில் நம்பிக்கையில்லை

Jenifer lopez told no belief on ageபாப் பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான, ஜெனிபர் லோபசுக்கு, 43 வயதாகி விட்டது. நான்கு குழந்தைகளுக்கு தாயார். "வயதாகி விட்டதே, இனிமேலும், ஹாலிவுட்டில்,உங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா என, அவரிடம் கேட்டால், சீறுகிறார். "என்னை பொறுத்தவரை, வயது என்பது, ஒரு எண்ணிக்கை மட்டுமே. அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது இல்லை. படங்களில் நடிப்பதற்கும், நடனமாடுவதற்கும், பாட்டுப் பாடுவதற்கும், முழு தகுதியுடனும், திறமையுடனும் இருக்கிறேன். உடலும், மனதும், இளமையாக உள்ளன. உலகம் முழுவதும் சென்று, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். சோம்பலாக,  எப்போதும், உணர்ந்தது இல்லை. 24 வயதில், எப்படி இருந்தேனோ, அப்படித் தான், இப்போதும் இருக்கிறேன். எனவே, இனியொரு முறை, எனக்கு வயதாகி விட்டதாக, கேள்வி கேட்காதீர்கள் என, பொரிந்து தள்ளினார்.

Tags »
Jenifer lopez
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in