Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாருக்கானுக்கு இந்தியாவில் பாதுகாப்பு கொடுங்கள்: பாக்., அமைச்சர் கோரிக்கை

29 ஜன, 2013 - 14:42 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என பாக்.உள்துறை அமைச்சர் , இந்தியாவிற்கு ‌வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர், ஷாருக் கான் (47) இவர் கவுரி என்ற பெண்ணை மணந்து, மும்பையில் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் அவ்வப்போது மிரட்டப்படுகிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகிறேன்.நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையை விட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு செல்லும் படியும், நான் மிரட்டப்படுகிறேன் என கூறியிருந்தார்.

பாக். வாருங்கள்; ஹபீஸ் சயீத் அழைப்பு :
இதை அறிந்த, பாக்., பயங்கரவாத அமைப்புகளின் தலைவன், ஹபீஸ் முகமது சயீத், ஷாருக்கானுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். அதில், இந்தியாவில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என நீங்கள் உணர்ந்தால், பாகிஸ்தான் வரலாம்; உங்களை வரவேற்க காத்திருக்கிறோம். பாகிஸ்தானில் நிரந்தரமாக தங்க ஏற்பாடு செய்கிறோம். உங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படும். ஷாருக்கிற்கு, பாகிஸ்தான் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கிறது, என்றார்.

பாதுகாப்பு கொடுங்கள்; ரஹ்மான் மாலிக்: இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளி்த்தார். அவர் கூறியதாவது: ஷாருக்கானை முஸ்லிம் என பார்க்க வேண்டாம். ஷாருக்கான், இந்திய ரசிகர்களால் மட்டுமல்ல பாகிஸ்தான் ரசிகர்களும் விரும்பும் ஒரு நடிகர். அவரை வேறுபடுத்தி பார்க்க‌ வேண்டாம். அவருக்கு பிரச்னை என்றால், இந்தியா உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, அவர் பாகிஸ்தான் ரசிகர்களால் நேசிக்கப்படும் நடிகர். இதுநாள் வரை அவரை மிரட்டியவர்கள், எதிராக செயல்படுபவர்கள் , அதனை விலக்கிக்கொள்ளுங்கள், ஷாருக்க‌ானை ஒற்றுமையின் சின்னமாக , இந்திய சகோதர, சகோதரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை.

இவ்வாறு ரஹ்மான்மாலிக் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

guru - singapore  ( Posted via: Dinamalar Android App )
30 ஜன, 2013 - 06:39 Report Abuse
guru பாதுகாக்க எங்களுக்கு தெரியும்.. உன் வேலைய பாருடா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in