Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நாவலை தழுவி உருவாகியுள்ள "சேப் ஹவென்

29 ஜன, 2013 - 01:07 IST
எழுத்தின் அளவு:

 தற்போது, ஹாலிவுட் பிரபலங்கள், தங்களின் புதிய படங்களின் கதைக்காக, ரொம்பவும் மெனக் கெடுவது இல்லை. பிரபல நாவலாசிரியர்கள் எழுதிய, பிரபலமான நாவல்களின் உரிமையை வாங்கி, ரீலாக்கி விடுகின்றனர். இந்த கான்செப்டில், லேட்டஸ்டாக தயாராகியுள்ளபடம் தான், சேப் ஹவென். நிகோலஸ் ஸ்பார்க்ஸ் என்ற எழுத்தாளரின், நாவலைத் தழுவி, இந்த படத்தை, இயக்கியுள்ளார், லெசே ஹால்ஸ்ட்ரோம் என்ற இயக்குனர்.அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள, சிறிய நகரத்துக்கு, ஒரு இளம் பெண் வருகிறார்.இவரின், கடந்த காலத்தை பற்றி, அந்த நகரத்தில் உள்ளவர்கள், கேள்வி எழுப்ப, அவரோ வாய்திறக்க மறுக்கிறார். அந்த நகரில் வசிக்கும், மனைவியை இழந்த ஒருவரின், காதல் வலையில் விழுகிறார், அந்த இளம் பெண். அதற்கு பின், அந்த இளம் பெண்ணின், கடந்த காலத்தை பற்றிய,மர்ம முடிச்சுகள், ஒவ்வொன்றாக அவிழ்கின்றன. அந்த முடிச்சுகள் ஒவ்வொன்றும், அதிர வைக்கும் உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன.இந்த படத்தில், ஜோஸ் துமேல், ஜூலியான் ஹக், கோபே ஸ்மல்டர், டேவிட் லைன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

மதி - Caguas,போர்டோ ரிகா
29 ஜன, 2013 - 04:59 Report Abuse
 மதி உங்களால் மட்டும் தான் இந்த விஷயத்தை மிகப் பெரிய தவறு போலக் காட்ட முடியும். "பெரிதும் மெனக் கெடுவதில்லையா"? ஒரு கதைக்கு உரிய உரிமத்தை வாங்குவதன் மூலம் அதன் படைப்பாளிக்குத் தகுந்த சன்மானம் அளிக்கின்றனர். புத்தகத்தைத் தழுவி படம் எடுப்பது ஒன்றும் புதிதில்லையே. நம்மூரின் பாரதி ராஜா, பாலச்சந்தர், மணி ரத்னம், பாலு மகேந்திரா, பாலா போன்ற சிறந்த இயக்குனர்கள் பிற எழுத்தாளர்களின் கதைகளைப் படமாக எடுத்ததில்லையா? ஹாலிவுட் படங்களையும், பழைய தமிழ்ப் படங்களையும் "தழுவி" படம் எடுத்து விட்டு, மூலக் கதைக்கு எந்த விதமான ஒப்புகையும் தராமல், "திருடி" படம் எடுக்கும் இன்றைய "படைப்பாளிகளைப்" பற்றி எழுதுங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in