வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
தற்போது, ஹாலிவுட் பிரபலங்கள், தங்களின் புதிய படங்களின் கதைக்காக, ரொம்பவும் மெனக் கெடுவது இல்லை. பிரபல நாவலாசிரியர்கள் எழுதிய, பிரபலமான நாவல்களின் உரிமையை வாங்கி, ரீலாக்கி விடுகின்றனர். இந்த கான்செப்டில், லேட்டஸ்டாக தயாராகியுள்ளபடம் தான், சேப் ஹவென். நிகோலஸ் ஸ்பார்க்ஸ் என்ற எழுத்தாளரின், நாவலைத் தழுவி, இந்த படத்தை, இயக்கியுள்ளார், லெசே ஹால்ஸ்ட்ரோம் என்ற இயக்குனர்.அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள, சிறிய நகரத்துக்கு, ஒரு இளம் பெண் வருகிறார்.இவரின், கடந்த காலத்தை பற்றி, அந்த நகரத்தில் உள்ளவர்கள், கேள்வி எழுப்ப, அவரோ வாய்திறக்க மறுக்கிறார். அந்த நகரில் வசிக்கும், மனைவியை இழந்த ஒருவரின், காதல் வலையில் விழுகிறார், அந்த இளம் பெண். அதற்கு பின், அந்த இளம் பெண்ணின், கடந்த காலத்தை பற்றிய,மர்ம முடிச்சுகள், ஒவ்வொன்றாக அவிழ்கின்றன. அந்த முடிச்சுகள் ஒவ்வொன்றும், அதிர வைக்கும் உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன.இந்த படத்தில், ஜோஸ் துமேல், ஜூலியான் ஹக், கோபே ஸ்மல்டர், டேவிட் லைன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உங்களால் மட்டும் தான் இந்த விஷயத்தை மிகப் பெரிய தவறு போலக் காட்ட முடியும். "பெரிதும் மெனக் கெடுவதில்லையா"? ஒரு கதைக்கு உரிய உரிமத்தை வாங்குவதன் மூலம் அதன் படைப்பாளிக்குத் தகுந்த சன்மானம் அளிக்கின்றனர்.
புத்தகத்தைத் தழுவி படம் எடுப்பது ஒன்றும் புதிதில்லையே. நம்மூரின் பாரதி ராஜா, பாலச்சந்தர், மணி ரத்னம், பாலு மகேந்திரா, பாலா போன்ற சிறந்த இயக்குனர்கள் பிற எழுத்தாளர்களின் கதைகளைப் படமாக எடுத்ததில்லையா?
ஹாலிவுட் படங்களையும், பழைய தமிழ்ப் படங்களையும் "தழுவி" படம் எடுத்து விட்டு, மூலக் கதைக்கு எந்த விதமான ஒப்புகையும் தராமல், "திருடி" படம் எடுக்கும் இன்றைய "படைப்பாளிகளைப்" பற்றி எழுதுங்கள்.