Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

"டாப் - 100 இந்தியர்கள் முதலிடத்தில் ஷாருக் கான்!

26 ஜன, 2013 - 08:38 IST
எழுத்தின் அளவு:

 புதுடில்லி: அதிக சம்பாத்தியம், அதிக புகழ் பெற்ற, 100 இந்தியர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகர், ஷாருக் கான் முதலிடம் பிடித்துள்ளார்.அமெரிக்காவின் பிரபல, "போர்ப்ஸ் பத்திரிகை, 2011, அக்டோபர் முதல், 2012 செப்டம்பர் வரை, அதிக சம்பளம், அதிக புகழ் பெற்ற இந்தியர்கள், 100 பேர் பட்டியலை தயாரித்துள்ளது.சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், "டிவி பிரபலங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், மாடலிங் துறை பிரபலங்கள், காமெடி நடிகர்கள் என, எட்டு பிரிவுகளில் பிரபலங்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர்.அதில், 203 கோடி ரூபாய் சம்பளம் பெற்று, பிறரை விட அதிக புகழையும் பெற்றுள்ள, பாலிவுட் நடிகர், ஷாருக் கான் முதலிடத்தை பிடித்துள்ளார். மற்றொரு பாலிவுட் நடிகரான, சல்மான் கான், இரண்டாம் இடத்தையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், தோனி, மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களில், அடுத்தடுத்த இடங்களை, பாலிவுட் நடிகர்கள், அக்ஷய் குமார், அமிதாப் பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை கரீனா கபூர், கிரிக்கெட் வீரர்கள், வீரேந்திர சேவாக், விராட் கோலி, நடிகை கத்ரினா கைப் ஆகியோர் பெற்றுள்ளனர்."டாப் - 100 பட்டியலில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையினர், 30 வயது முதல், 50 வயது வரை உள்ளவர்கள்.பாட்மின்டன் வீராங்கனை, சாய்னா நேவால், கிரிக்கெட் வீரர், விராட் கோலி, பாலிவுட் நடிகை, அனுஷ்கா சர்மா மற்றும் டென்னிஸ் வீராங்கனை, சானியா மிர்சா ஆகிய, 12 பேர், "டாப் - 50 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

யுவராஜ் - Singapore  ( Posted via: Dinamalar Android App )
26 ஜன, 2013 - 15:48 Report Abuse
யுவராஜ் 28ஆம் இடத்தி்ல் விஜய்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in