ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விரைவில் வெளிவர இருக்கும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இந்தி நடிகர் ஷாரூக்கானின் படம் இடம்பெற இருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். இந்நிலையில் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் சக்திவாய்ந்த 100 பிரபலங்களின் பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறது. இதில் போர்ப்ஸ் பத்தரிக்கையின் அட்டை படத்தில் ஷாரூக்கான் படம் இடம்பெறுகிறது. மேலும் அந்த 100பேர் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற இருக்கிறது. அட்டை படத்தோடு ஷாரூக்கானின் பேட்டியும் வெளியாக உள்ளது. அதில் ஷாரூக்கின் சினிமா வாழ்க்கை, அவர் கடந்த வந்த பாதை, ஐ.பி.எல். போட்டியில் அவரது பங்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் வெளியாக உள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்திய பதிப்பு கடந்த 4 ஆண்டுகளாக வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதுவரை இந்திய நடிகர்களின் படங்கள் ஏதும் அட்டைப்படத்தில் வெளியானது இல்லை. இப்போது முதல்முறையாக, முதல் இந்திய நடிகர் என்ற பெருடன் ஷாரூக் படம் போர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியாக இருக்கிறது.