ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப், சேவை வரி செலுத்தாதது தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். "டிவி விளம்பரங்களில் நடித்ததற்கு, பாலிவுட் நடிகை கத்ரீனா, சேவை வரி செலுத்தவில்லை எனக்கூறி, அவருக்கு எதிராக, மத்திய சேவை வரித் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. "இதற்கான அபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்து, 2.79 கோடி ரூபாயை, கத்ரீனா செலுத்த வேண்டும் என, சேவைத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பான வழக்கு, மும்பையில் உள்ள, சுங்கம், கலால் மற்றும் சேவை வரித் துறை தீர்ப்பாயத்தில் நடந்தது.
இந்நிலையில், கத்ரீனா சார்பில், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்ட்டது. அதில், கூறப்பட்டதாவது: இந்த விவகாரத்தில், எனக்கான வரியை செலுத்துவதற்காக, மேட்ரிக்ஸ் என்ற நிறுவனத்தை, ஏஜென்ட்டாக நியமித்திருந்தேன். அந்த நிறுவனம், நான் செலுத்த வேண்டிய வரியை, செலுத்தி விட்டதாக, தற்போது தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கிலிருந்து, என்னை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கத்ரீனா கூறியிருந்தார். இதையடுத்து, கத்ரீனா மீதான, சேவை வரி வழக்கை, சேவை வரி தீர்ப்பாயம் ரத்து செய்வதாக அறிவித்தது.