ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, தான் நடித்த, "மாத்ரு கி பிஜிலி கா மன்டோலா என்ற படத்தை, மிகவும் எதிர்பார்த்து இருந்தார். ஆனால், இந்த படம் வெளியானதும், தியேட்டருக்கு போய் பார்த்ததும், மிகவும் அப்செட் ஆகி விட்டார்."ஏன் என, அவரிடம் கேட்டபோது, "இந்த படத்தில் எனக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர். இதற்கு முன், இப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படங்களில் நடித்தது இல்லை. இதற்காக, உயிரைக் கொடுத்து, நடித்திருந்தேன். ஆனால், படம் வெளியானதும் பார்த்தால், நான் சிறப்பாக நடித்திருந்த பல காட்சிகளை காணோம். எல்லாத்தையும் வெட்டி விட்டனர். நினைத்தால், அழுகை அழுகையாக வருகிறது என, கண்களை கசக்குகிறார்.