பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
பெண்கள் வலிமையானவர்கள், ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பல கோடிகளை சம்பாதித்து வந்தனர்.தற்போது முதல் முறையாக பெண் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் ரூ.5 கோடி பரிசை தட்டி சென்று உள்ளார். 37 வயதான சன்மீத் கவுர் சாவ்னே என்ற அந்த பெண் 12வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள போதிலும், தனது அறிவால் சாதனை படைத்து உள்ளார். இதற்கு இந்தி மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இளம்பெண்களின் கவுரவம் சிதைக்கப்படுவதிலும், விலங்குகளை போன்றவர்களின் வெறுக்கத்தக்க செயலால் அவமானம் ஏற்படுவதிலும் நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் குரோர்பதி நிகழ்ச்சியில் பெண் ஒருவர் சாதனை புரிந்து உள்ளார். ஆண்கள் உலகில் இப்படியொரு பெண்ணை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை தந்து உள்ளது. கற்பழிப்பு குற்றங்களால் நாடு வெட்கி தலைகுனிந்து நிற்கும் இந்த நேரத்தில், பெண்கள் வலிமையானவர்கள், அவர்கள் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒட்டுமொத்த நாட்டிற்கும் இந்த பெண் நிரூபித்து காட்டி இருக்கிறார். அவருடைய சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன், என்றார்.