சீனாவில் ஐமேக்ஸில் பாகுபலி 2 | எம்.எஸ்.ராஜேஸ்வரியை மறந்த தமிழ்த் திரையுலகம் | 'அர்ஜுன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் | மீண்டும் சமுத்திரகனி இயக்கத்தில் அமலாபால் - நானி | மோகன்லால் தவிர்க்கிறார் : தேசியவிருது இயக்குனர் வருத்தம் | மோகன்லாலின் ஒடியன் படப்பிடிப்பு நிறைவு | 6 ஆண்டுகள் கழித்து பாடிய மம்முட்டி | தமன்னா ஹிந்தி படம், மொத்தமாக ரீ-ஷூட் | மணிரத்னத்திடம் விஜய்சேதுபதி சொன்ன பழையகதை | பாலியல் குற்றச்சாட்டு - உஷா ஜாதவ் பரபரப்பு பேட்டி |
இந்தியில், கடந்தாண்டு வெளியாகி, பரபரப்பாக ஓடியதோடு, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்ற படம், பர்பி. இதில், ரன்பீர் கபூர், காது கேளாதவராகவும், வாய் பேசாதவராகவும் நடித்திருந்தார். பிரியங்கா சோப்ரா, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்திருந்தார். இந்த படம், ஆஸ்கர் விருதுக்காக, இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான போட்டியில், "பர்பியும் பங்கேற்றது. இதனால், பிரியங்கா சோப்ரா, உற்சாகத்தில் இருந்தார். ஆனால், இறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றில் பங்கேற்பதற்காக, ஒன்பது படங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில், பர்பி இடம் பெறவில்லை. இதைக் கேள்விப்பட்டதில் இருந்து, சோகத்தில் ஆழ்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
இதுகுறித்து அவர் கூறுகையில்," விருது கிடைக்காதது சோகமாகத் தான் இருக்கிறது. ஆனால், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில், நான் நடித்த படமும், பங்கேற்றது என்பதே, எனக்கு பெருமையான விஷயம் தானே என, தனக்கு தானே, ஆறுதல் கூறிக் கொள்கிறார்.