ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினிஇந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தவர் அசின். அந்த படத்திற்கு பிறகு முழுநேர இந்தி நடிகையாகி விட்டதால், தென்னிந்திய படங்களை ஓரங்கட்டினார். இந்த நிலையில், சமீபகாலமாக அசின் நடித்த படங்களில் தோல்வியை அவரது மார்க்கெட்டை சரித்திருக்கிறது. அதனால் நல்ல கதைகளுக்கான தேர்வில் தீவிரமடைந்திருக்கும அசின், தமிழில் வெளியான துப்பாக்கி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்கிறார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் நாடிச்சென்று மீண்டும் சான்ஸ் கேட்டிருக்கிறார்.
ஆனால் அவர் அதற்கு சம்மதம் சொல்வது போல் நிலைமை இருந்தாலும், படத்தில் நாயகனாக நடிக்கும் அக்ஷய்குமாரோ அசின் நாயகி என்றதும் முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாராம். எனக்கு அவர் பொருத்தமான நடிகை இல்லை. அதனால் தொடர்ந்து எனது வெற்றிப்படங்களில் நடித்த சோனாக்ஷி சின்ஹாதான் இந்த படத்திலும் நடிக்க வேண்டும் என்று உறுதிபட சொல்லி விட்டாராம். இதனால் அசினுக்காக ஹீரோவுடன் மல்லுக்கட்ட வேண்டாம் என்று நினைத்த முருகதாசும், அசினை மறுபேச்சின்றி ஓரங்கட்டிவிட்டாராம். அதனால் இப்போது சோனாக்ஷி மீது கோபத்தை திருப்பியிருக்கிறாராம் அசின். அதோடு அவரை அக்ஷய்குமாருடன் இணைத்து தவறான கிசுகிசுக்களையும் தீவிரமாக பரப்பி விட்டு டென்சன் பண்ணி வருகிறாராம்.