Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சினிமாவாகிறது டில்லி கற்பழிப்பு சம்பவம்!

27 டிச,2012 - 12:28 IST
எழுத்தின் அளவு:

உண்மை சம்பவங்களை சினிமாவாக்கும் முயற்சி காலங்காலமாக இந்திய சினிமாவில் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் டில்லியில் ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சினிமா எடுக்கப்பட உள்ளது. டில்லி மாபியா என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்த படத்தை பிரபல பாலிவுட் டைரக்டர் ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். டில்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கற்பழிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையுடன் டில்லியில், மாணவ – மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் திரைப்படம் ஆகிறது. மும்பை 125 கிலோ மீட்டர் என்ற இந்தி படத்தை இயக்கிய ஹேமந்த் மதுகர், இந்த படத்தை இயக்க முன்வந்து இருக்கிறார். இந்த படத்துக்கு அவர், டெல்லி மாபியா என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இது, மிகவும் வெட்ககேடான சம்பவம். டில்லியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டில்லியில் நம் சகோதரிகளும், மகள்களும் தினமும் படும் கஷ்டங்களையும், சிரமங்களையும் படத்தில் காட்டப் போகிறேன். கற்பழிப்பு சம்பவத்தில் நடந்த உண்மைகளை அப்படியே சொல்லப் போகிறேன். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன. அதையும் படத்தில் காட்ட இருக்கிறேன். படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் முடிவு செய்யப்படுவார்கள். எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும், என்று கூறியுள்ளார்.

துப்பாக்கி துப்பாக்கி "ரீ-மேக்கில் சோனாக்ஷி என் பேச்சை நானே கேட்க மாட்டேன்: தீபிகா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்: ...


வாசகர் கருத்து (10)

பாபு - tiruchi,இந்தியா
08 ஜன,2013 - 00:38 Report Abuse
 பாபு கற்பழிக்க பட்டு ரோடில் ஆடை இல்லாமல் வீச பட்டு சென்ற காட்சிகளை நடிகை நடித்தால் நல்லா காசு பண்ணலாமே, கற்பழிப்பு என்பதன் முக பாவனை உடல் பாவனைகளை காட்டி காட்டி சிறுவர்கள் முதல் அனைவருமே கெட்டி காரர்கள் ஆகி விட்டனர், சினிமா பாலுணர்வின் தன்மையிளிர்ந்து வெளி வந்து அறிவியல் தொழில் நுட்பம் இவற்றில் காலுன்ற வேண்டும்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
shiva - dindigul,இந்தியா
06 ஜன,2013 - 12:00 Report Abuse
 shiva வேண்டாம் please
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பார்வதி murali - melbourne,ஆஸ்திரேலியா
02 ஜன,2013 - 09:36 Report Abuse
 பார்வதி murali இது மாதிரி உள்ள சம்பவம்கள் நடப்பதற்கு காரணமே சினிமா தான் cinemavil நல்ல செய்திகள் காண்பிக்கப்பட்டால்;யூத்ஸ் திருந்துவார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
syamalavenkataraman - chennai,இந்தியா
31 டிச,2012 - 16:18 Report Abuse
 syamalavenkataraman இம்மாதிரி நிகழ்சிகளுக்கு காரணமே சினிமாக்கள்தான் இலைமறைவு விஷயங்களை பெரிய திரையில் போட்டு மேலும் மேலும் இது போன்ற நிகழ்சிகள் நடக்க வேண்டாம் என நினைக்கிறோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
raju - singapore,இந்தியா
30 டிச,2012 - 19:39 Report Abuse
 raju பெண்கள் சுதந்திரம் எப்பொழுது கிடைக்கும் ? இந்தியாவிற்கு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kalkandu
  • கல்கண்டு
  • நடிகர் : கஜேஷ்
  • நடிகை : டிம்பிள்சோப்டே
  • இயக்குனர் :ஏ.எம்.நந்தகுமார்
  Tamil New Film Super Nani (Hindi)
  • சூப்பர் நானி(இந்தி)
  • நடிகர் : ,ஷர்மன் ஜோஷி, ரன்தீர் கபூர்
  • நடிகை : ,ரேகா, ஸ்வேதா குமார்
  • இயக்குனர் : ,இந்திரா குமார்
  Tamil New Film Andaava Kanom
  Tamil New Film Happy New Year ( Hindi)
  • ஹேப்பி நியூ இயர்(இந்தி)
  • நடிகர் : ஷாரூக்கான் ,அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூட்
  • நடிகை : தீபிகா படுகோனே
  • இயக்குனர் : ,ஃபாராக் கான்
  Advertisement
  Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in