சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
தமிழில் வெளியாகி, வெற்றி பெற்ற, "துப்பாக்கி படம், இந்தியிலும் தயாராகிறது என்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போகும், இந்த படத்தில், அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார். இதில், ஹீரோயினாக நடிக்கப் போவது யார் என்பதில், பாலிவுட்டின்,"டாப் ஹீரோயின்களிடையே, கடும் போட்டி நிலவியது. தமிழில் நடித்த, காஜல் அகர்வால் தான், இந்தியிலும், ஹீரோயினாக நடிக்கிறார் என்ற செய்தி, சில நாட்களுக்கு முன், வெளியானது. இதைத்தொடர்ந்து, பிரணிதி சோப்ராவின் பெயரும் அடிபட்டது. இப்போது, சோனாக்ஷி சின்கா தான், இதில் ஹீரோயினாக நடிக்கப் போவதாக, உறுதியான தகவல்கள், பாலிவுட்டில் உலா வருகின்றன. இதனால், சோனாக்ஷிக்கு, பாலிவுட்டில் கிராக்கி அதிகரித்துள்ளது.