டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
"கோவா, பலேபாண்டியா, கோ என, சில படங்களில் நடித்த பியா, இப்போது, தமிழ், தெலுங்கு என, பரவலாக, பல மொழி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். "சட்டம் ஒரு இருட்டறையை அடுத்து, தமிழ், தெலுங்கில் தயாராகும், ஒரு படத்தில் நடிக்கிறார். கதைப்படி, இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கும் பியா, அந்த கதாபாத்திரத்திற்கேற்ப பாவாடை, தாவணி அணிந்து நடிக்கிறாராம். முதலில், மாடர்ன் நடிகை என்ற முத்திரை விழுந்துவிட்ட தனக்கு, கிராமிய வேடம் பொருந்துமா? என்று தயங்கினாராம் பியா. ஆனால், படத்தின் இயக்குனர் கொடுத்த தைரியத்தில், கிராமத்து கெட்டப்புக்கு மாறியுள்ளார் பியா. அதைப் பார்த்து, பக்கா வில்லேஜ் பெண்ணாட்டம் இருக்கிறது என்று யூனிட் நபர்கள் சொல்ல, இனி, சிட்டி, வில்லேஜ் என, இரண்டு விதமான கதைகளிலும் நடிக்க முடிவெடுத்துள்ளார் பியா.