Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில் காயம்: டாப்சிக்கு பிசியோதெரபி சிகிச்சை

12 அக், 2021 - 13:21 IST
எழுத்தின் அளவு:
Taapsee-Pannu-suffered-leg-injury-on-sets-of-Rashmi-Rocket

டாப்சி நடித்து முடித்துள்ள இந்தி படம் ராஷ்மி ராக்கெட். இது ஒரு ஓட்டப்பந்தைய வீராங்கனையின் கதை. சாதாரண குக்கிராமத்தில் பிறந்த ஒரு பெண் சர்வதேச தடகள வீராங்கனையாக எப்படி மாறுகிறாள் என்கிற கதை. இந்த படத்தை ஆகர்ஸ் குரானா இயக்கி உள்ளார். டாப்சியுடன் பிரியங்கா பனியுல், அபிஷேக் பானர்ஜி, ஸ்வேதா திரிபாதி, சுப்ரிய பட்டக் நடித்துள்ளனர்.


இந்த படம் கொரோனா காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்டு கொரோனாவால் தடைபட்டு, ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதும் ஒரே கட்டமாக படத்தை எடுத்து முடித்து விட்டனர். இந்த படம் வருகிற 15ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


படத்தை உரிய காலத்துக்குள் முடிக்க படப்பிடிப்புகள் வேகமாக நடந்தது. படக் காட்சிக்காக டாப்சி விளையாட்டு மைதானத்தில் வேகமாக ஓடும் காட்சிகள் படமாக்கப்பட்டபோது டாப்சிக்கு தசை பிசகு ஏற்பட்டது. என்றாலும் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது சிறிய சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வலியை தாங்கிக் கொண்டு நடித்து முடித்தார். இப்போது தசை பிசகு பிரச்னை பெரிதாகி இருக்கிறது. இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட டாப்சி வீட்டில் பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார்.


இதுகுறித்து டாப்சி கூறும்போது: ஓட்டப்பந்தைய காட்சிகள் எடுக்கப்பட்டபோது தவறி விழுந்ததில் தசை பிசகு ஏற்பட்டது. என்றாலும் வலியை தாங்கி கொண்டு நடித்தேன். இதனால் வலி அதிகமானதோடு பிரச்சினையும் அதிகமானது, தசைகள் இறுகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது டாக்டர்கள் கண்காணிப்பில் பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறேன். ஒரு வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க செல்வேன், என்கிறார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிரக்யாவுக்கு மீண்டும் கொரோனாபிரக்யாவுக்கு மீண்டும் கொரோனா டூப்ளிகேட் ஷாருக்கான்களுக்கு வந்த புது சிக்கல் டூப்ளிகேட் ஷாருக்கான்களுக்கு வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sudharman - chennai,இந்தியா
13 அக், 2021 - 13:02 Report Abuse
sudharman அந்த எனர்ஜி ட்ரின்க் குடிக்கலையா... ஓவரான விளம்பரம். மற்றபடி ஒன்னும் இல்லை. மக்களை ஏமாற்றும் விளம்பரமாக இல்லாமல் இருந்தால் சரி. இது எல்லோருக்கும் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in