Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ரசிகன் குரல் »

சொல்லத்தான் நினைக்கிறேன் - ரசிகன் குரல் - சொல்லி அடித்த நடன கில்லிக்கு...

24 மே, 2015 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Open-letter-to-Raghava-lawrence

உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத நினைத்தவுடன், 'பத்தாவது முறை விழுந்தவனிடம் முத்தமிட்டு சொன்னது பூமி, ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ' எனும் வைரமுத்துவின் கவி வரிகள் தான் என் நினைவுக்கு வந்தன. காரணம், நடன கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராவதற்கு கூட வசதி இல்லாத நிலையில் இருந்து, இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் இந்த உயரமும்; சினிமா நடிகரான பின்பும், மனிதம் தொலைக்காத உங்களின் மனமும்!


நடனத்தில் தேர்ந்த உங்களை, ஒரு நடிகராக ஏற்றுக்கொள்ள சிலர் தயங்கிய போது, உங்களுக்கென ஒரு தனி நடிப்பு பாணியை உருவாக்கி ஜெயித்தீர்கள். பயமுறுத்தியே பழக்கப்பட்ட பேய்கள், தங்கள் தரப்பு நியாயத்தையும் பேசி, குழந்தைகளை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து, அவர்களின் மனதிற்குள் போய் சிம்மாசனமிட்டது, உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ஆனால், ஒரே விஷயத்தை மாற்றி மாற்றி செய்தால், குழந்தைகளுக்கும் கூட, ஒரு நாள் சலிப்பு தட்டி விடும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.


ஒரு நடிகராக நீங்கள் தேர்வு செய்த கதைகளுக்குள்ளும், இயக்குனராக உங்களுடைய கதை சொல்லும் முறையிலும், கலகலப்பையும் தாண்டி ஒருவித வலி இருந்தது. அந்த வலியை சரியாய் சொல்லும் வித்தை, உங்களுக்கு தெரிந்திருந்தது. திரட்சியான, ஆண்மை பொருந்திய ஒரு நடிகரை திருநங்கையாக்கி, அவரை எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வைத்தது அந்த வித்தை தான்! என்றாலும், அந்த யுக்தி 'காஞ்சனா 2'வில், கொஞ்சம் தடுமாறியிருக்கிறது. அதன் சாட்சியே, 'மொட்டை' ரவியின் தோல்வி.


இன்று, வியாபார ரீதியாக உங்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்புக்கு அடிப்படை, ரசிகர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை! அந்த நம்பிக்கை தொடர வேண்டுமானால், இனிமேலும், இத்தகைய 'கண்கட்டி வித்தை' கதைகளை நம்பாதீர்கள்! நீங்கள் எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலேயே இந்த வேண்டுகோள்; ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.


இப்படிக்கு,


உங்கள் ரசிகன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in