Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ரசிகன் குரல் »

சொல்லத்தான் நினைக்கிறேன் : ரசிகன் குரல்

15 பிப், 2015 - 13:54 IST
எழுத்தின் அளவு:

அதிரடி அரசியல் இயக்குனருக்கு...


கடந்த 1980களில், புது ரத்தம் பாய்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில், 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற முழக்கத்தோடு, மிக துணிச்சலாய் நுழைந்தீர்கள்; தொடர்ந்து, அதே பாதையில், மிக கம்பீரமாய் பலமுறை ஜெயித்தீர்கள்! இந்நிலையில், உங்களுடைய இயக்குனர் பயணத்தை, சமீபத்திய 'டூரிங் டாக்கீஸ்' உடன் நிறுத்திக் கொள்வதாக நீங்கள் அறிவித்ததில், எனக்கு மிகப்பெரும் வருத்தம்! காரணம், 'வெற்றி இயக்குனர்களின் கடைசி படைப்புகள் சரியாக அமைவதில்லை' என்பதற்கு, நீங்களும் ஒரு சாட்சி ஆகியிருக்கிறீர்கள், இந்த படைப்பின் மூலம்!


விஜயகாந்தை கதாநாயகனாக்கி வளர்த்தது, யாருமே இயக்க முன்வராத போது, தயாரிப்பாளராகி, விஜய்யை வெற்றி கதாநாயகனாக்கியது, பூனைக்கு மணி கட்ட எல்லோரும் யோசித்த போது, 'டிஜிட்டல்' நுட்பத்தில் படம் எடுத்தது எல்லாம்... இயக்குனராய், தயாரிப்பாளராய் உங்களுடைய துணிச்சலின் சாட்சிகள்!


படங்களில் பேசியதோடு மட்டுமல்லாமல், மகனுடைய ரசிகர் நற்பணி மன்றத்தை, 'மக்கள் இயக்கம்' ஆக்கி, விதையாக விழுந்த உங்கள் அரசியல் ஆசை, தயாரிப்பாளர் சங்க தேர்தல் விவகாரத்தில், வேர் பிடித்துக் கொண்டது.


நடிகனை அரசியல்வாதியாக்கி அழகு பார்க்கும் தமிழனுக்காக, நீங்கள் முதன்முறையாக கதாநாயகனாக நடித்த 'டூரிங் டாக்கீஸ்', எதிர்பார்த்த பலனை தரவில்லை. காரணம்... அழுத்தமான அம்சங்களுடன் கூடிய ஒரு படத்தை, இரண்டு கதை என்று கூறு போட்டு, நீங்கள் அவியல் ஆக்கியதுதான்!


'என் இயக்கத்தில் வரும் கடைசிப் படம், சமூகத்தின் கண்களைத் திறக்க வேண்டும்' - இது, 'டூரிங் டாக்கீஸ்' வெளியீட்டிற்கு முன், நீங்கள் வெளிப்படுத்திய ஆசை! இதை மெய்ப்பிக்கும் வகையிலான படங்களைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். உங்களின் அடுத்த முயற்சியிலாவது, உங்கள் ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்!


எதிர்பார்ப்புடன்,


உங்கள் ரசிகன்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in