பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'ஐ' என்று, சில பல வருடங்களுக்கு முன் வியக்க வைத்த இயக்குனர் ஷங்கர் அவர்களே...
மூன்று வருட உழைப்பு, 100 கோடி மதிப்பு, பிரமாண்ட வரவேற்பு என, 'ஐ' படத்தின் வெளியீடு அமோகம்! ஆயினும், 'ஜென்டில்மேன்' ஷங்கரை தமிழ் சினிமா இழந்து விட்டதோ' என்ற பயம் எனக்கு!
'அனைவருக்கும் இலவச கல்வி வேண்டும்'; 'ஊழல் இல்லா உலகம் வேண்டும்'; 'தனிமனித ஒழுக்கம் வேண்டும்' என்ற பாடங்களை எல்லாம், நான் படித்து கற்றேன் என்பதை விட, தங்களின் 'ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன்' படங்களை பார்த்து கற்றேன் என்பதுதான் உண்மை!
இப்படி, ஆழமான கதைக்களம், அழுத்தமான திரைக்கதை, அசாத்திய லொக்கேஷன்ஸ், அதிரடி பட்ஜெட் என்று வளர்ந்த நீங்கள்... காற்று புகாத இடத்தில்கூட, கேமராவை புகுத்தி பிரமிக்க வைக்கும் நீங்கள், காற்று போன பலூன் போன்ற ஒரு கதையைக் கொண்டு, 'ஐ'யகோ என்று கதற வைத்தது நியாயமா?
சரி, போகட்டும்... ஜாலியாக படத்தை ரசிக்கலாம் என்றால், பெண்களின் உள்ளாடையை வைத்து கேலி, பெண்ணின் பாகங்களை குறிப்பிட்டு 'நகைச்சுவை'(!) வசனம் (சுஜாதா சார், ஐ மிஸ் யூ!), திருநங்கையின் அறை எண்ணை காண்பித்து, அவர்களை சீண்டும் காட்சி என, அடுத்தடுத்து நீங்கள் அதிர்ச்சி அடைய வைத்ததில், மடியில் அமர்ந்திருந்த என் பாப்பாவின் கண்ணையும், காதையும், மூடி மூடி திறப்பதுதான் என் தலையாய கடமையாக இருந்தது.
இதெல்லாம் விட, 'கூனன்' விக்ரம் கதாபாத்திரமோ, '300' ஆங்கில படத்தின் 'எபியால்ட்ஸ் ஆப் ட்ரசிஸ்' கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தியது. அவர்தானா இவர்?
இறுதியாக ஒரு வேண்டுகோள்... வைரஸ் போல பரவியிருக்கும் உங்கள் 'ஐ'யால், விக்ரமைவிட அதிகம் பாதிக்கப்பட்டது, என்னைப் போன்ற உங்களின் ரசிகர்களே! அதனால், உங்களின் அடுத்த அடியாவது, அகலமாக இல்லாமல், பழைய மாதிரி ஆழமாக இருக்கட்டும்!
இப்படிக்கு,
உங்கள் ரசிகை.