அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
ஒன்பதுல குரு என்கிற படத்தில் வினய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமிராய். படப்பிடிப்பில் வினய், லட்சுமிராயின் கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டு வலிய வலிய பேசுகிறாராம். அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே வருவோர் போவோரிடமெல்லாம் லட்சுமிராயை புகழ்ந்து தள்ளுகிறாராம். ரெண்டு பேருக்குமே சொந்த ஊர் பெல்காம் என்பதும். இருவருமே ராய் பேமிலி என்பதும் நெருக்கத்துக்கு கூடுதல் பலம் கொடுக்கிறதாம். லட்சுமிராயின் காதலை எப்படியாவது பெற்று விட வேண்டும் என்று விடாமல் நூல் விட்டுக் கொண்டிருக்கிறாராம் வினய். ஒரு கட்டதுக்கு மேல் பொறுமை இழந்த ராய் இயக்குனரிடம் "அவரை கொஞ்சம் அடங்கி இருக்கச் சொல்லுங்க. சீக்கிரமே என போர்ஷனை முடிச்சு அனுப்புங்க. என்னோட லெவல் தெரியாம நடந்துக்கிறார்" என்று சொல்லியே விட்டாராம். இதனால் ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம் வினய்.