Advertisement

சிறப்புச்செய்திகள்

விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்! தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு!!

18 டிச, 2012 - 15:34 IST
எழுத்தின் அளவு:

டி.டி.எச்.,-ல் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் கமலின் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ‌ரிலீஸ் ஆவது சிக்கலாகியுள்ளது. கமல் நடித்து, இயக்கி, ஹாலிவுட் பாணியில் பிரம்மாண்டமாய் தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படம் பொங்கல் திருநாளையொட்டி ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்கு முன்பாக டி.டி.எச்.,ல் வெளியிட கமல் முடிவு செய்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தபோதும், தியேட்டர் உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கமல் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக கமல் தரப்பிலும், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் கமல் தமது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. அதேபோல் தியேட்டர் உரிமையாளர் தங்களது முடிவில் பின்வாங்கவில்லை. இதனிடையே விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் வெளியிட் ஏர்டெல், வீடியோகான் போன்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர் சங்கத்தின் அவசரக்கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டவர்களுடன் 80க்கும் மேற்பட்ட தி‌யேட்டர் உரிமையாளர்களும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் எந்த திரைப்படத்தையும் தியேட்டரில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வரூபத்தை ஒளிபரப்பினால் தியேட்டர்களில் அப்படத்தை திரையிடக்கூடாது என்றும், விஸ்வரூபம் மட்டுமல்லாது எதிர்காலத்தில் எந்த படமும் இதுபோன்று டி.டி.எச்.ல் ஒளிப்பரப்பபட்டால் அந்த படங்களையும் தியேட்டரில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தியேட்டர் உரிமையாளர்களின் இந்த முடிவால் விஸ்வரூபம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

arkavithabalaji - chennai,இந்தியா
19 டிச, 2012 - 21:19 Report Abuse
 arkavithabalaji DTH இல் ரிலீஸ் vendam
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
19 டிச, 2012 - 14:43 Report Abuse
 மொக்கையன் அடி ஆத்தி ஆரோ சவுண்ட் ... அங்கிட்டு கேக்கும் ... இங்கிட்டு கேக்கும் ... அப்புடின்னு சொன்னீகலெ .. இப்போ டிவி க்கு கொடுத்தா எப்புடி ...
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
19 டிச, 2012 - 14:40 Report Abuse
 மொக்கையன் இங்க கமெண்ட் பண்ண நம்ம பயலுகளுக்கு டிவி ல ஒரு தடவ விஸ்வரூபம் பார்க்க ஆயிரம் ரூபா தரணும்னு தெரியாது போல ...
Rate this:
SAANNGAR - trichy,இந்தியா
19 டிச, 2012 - 12:05 Report Abuse
 SAANNGAR பாவம் கமல், படம் மொக்கை என அவரே முடிவு பண்ணிட்டார்! எங்கே காண்பித்தால் என்ன?
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
19 டிச, 2012 - 11:03 Report Abuse
 மொக்கையன் இது சரியான முடிவு .... ஒரு வாரத்துல DVD வந்துடும் ... இவரு DTH கிட்ட பணம் வாங்கிப்பாரு .. theatre owner எங்கே போறதாம் ...
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in