சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! | கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்! | மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் |
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிழக்கு பாத்த வீடு. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை இவர்கள் இயக்கும் முன்பாக, மதுரை வட்டாரத்தைச்சேர்ந்த இப்படத்தின் தயாரிப்பாளர், தங்கள் பகுதியைச்சேர்ந்த அந்த வைரம் பாய்ந்த அந்த பிரபல கவிஞரை சந்தித்து படமெடுப்பது பற்றி சொன்னாராம். அப்போது, நீங்கள் படத்திலுள்ள மொத்த பாடல்களையும் எனக்கு எழுத சான்ஸ் கொடுத்தால், உங்கள் படத்தின் வியாபாரத்துக்கு நான் கேரண்டி என்று சொன்னாராம். விநியோகஸ்தர்களிடம் பேசுவேன், பெரிய டி.வியில் விற்று கொடுப்பேன் என்றெல்லாம் ஏகத்துக்கு எடுத்து விட்டாராம்.
அதில் மயங்கிய தயாரிப்பாளர், புதுமுகங்களை வைத்து இயக்கும் படம் என்றுகூட நினைக்காமல் பல கோடிகளை செலவு பண்ணி படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் படப்பிடிப்பை முடித்து விட்டு, படம் பார்க்க சம்பந்தப்பட்ட கவிஞரை அழைத்தபோது, படத்தை பார்த்து விட்டு சென்றவர்தானாம். அதையடுத்து படத்தின் வியாபாரம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம். இதனால் தடுமாறிக்கொண்டு நிற்கிறார் புது படாதிபதி. விநியோகஸ்தர்களும் கைவிட்ட நிலையில், இப்போது சொந்தமாக படத்தை வெளியிட்டாவது போட்ட பணத்தை கைப்பற்றலாமா? என்று ரிஸ்க் எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, அந்த கவிஞரை நம்பி சினிமாவில் இறங்கி இப்படி வகையாக மாட்டிக்கொண்டேன் என்று சந்திப்பவர்களிடம் புலம்பித்தள்ளி வருகிறார்.