நம்பியாராக ஸ்ரீகாந்த் | தூங்கும்போது கூட புடவை அணிந்துதூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை | விரைவில்..."இட்டராமையிலதோ | ஸ்ருதியை கவர்ந்தசுரேஷ் ரெய்னா | "தங்கச்சி பாப்பா பிறக்க போகுது | சமந்தாவுக்கு திருமணமா?கோலிவுட்டில் பரபரப்பு | அரசியல் ஆசை இல்லை விஜய் பளீச் பதில் | தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- சமந்தா | ஹன்சிகா மாதிரி குண்டாகப்போகிறாராம் ப்ரியா ஆனந்த்! | டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்! |
துப்பாக்கி படத்தின் வெற்றி காரணமாக தமிழ் சினிமா தன்னை டோட்டலாக தத்தெடுத்துக்கொள்ளும் என்றுதான் நினைத்திருந்தார் காஜல்அகர்வால். ஆனால் அதன்பிறகு கார்த்தி நடிக்கும் அழகுராஜா ஆல்இன்ஆல் என்ற படத்தில் மட்டுமே கமிட்டான காஜலை அதையடுத்து யாருமே சீண்டவில்லை. இருப்பினும் சில படங்களை கைப்பற்றும் முயற்சியில் திரைக்குப்பின்னால் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் காஜல். ஆனால் அப்படி அவர் பேசிக்கொண்டிருந்த வரு படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க முன்கூட்டியே பேசி வைத்திருந்தார்களாம். ஆனால் இதுதெரிந்தும், படாதிபதிகளை வற்புறுத்தி தான் அந்த படங்களில் கமிட்டாக முண்டியடித்திருக்கிறார் காஜல்.
ஆனால் இந்த விவகாரம் எப்படியோ ஹன்சிகாவின் காதுகளை எட்ட கடுப்பாகி விட்டாராம். அனுஷ்கா, அஞ்சலி போன்ற நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு தான் கஷ்டப்பட்டு பிடித்த வாய்ப்பை இவர் தட்டிப்பறிக்க முயல்வதா? என்று கொதித்துப்போனவர், தனக்கு சிபாரிசு செய்து அந்த படத்தில் தன்னை கோர்த்து விட்ட ஹீரோக்களுடன் அவசர சந்திப்பு நடத்தியிருக்கிறார். இதையடுத்து, மேற்படி ஹீரோக்கள் களமிறங்கி, ஹன்சிகா படத்தில் இல்லையென்றால், நானுமிலலை என்று அட்வான்சை தூக்கி எறிந்து விட்டார்களாம். இதனால் ஆடிப்போன படாதிபதிகள், காஜலுடனான பேச்சுவார்த்தையையே முடித்துக்கொண்டனர். ஹன்சிகா அதிரடியாக கொடுத்த இந்த கரண்ட் ஷாக், காஜலை தடுமாற வைத்துள்ளது. பாலிவுட் நடிகைகளையே திணற வைத்த என்னையே ஒரு நடிகை ஓரங்கட்டி விட்டாரா? என்று ஓவராக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். அதோடு, அடுத்து கோலிவுட்டில் ஆழக்காலூன்ற எந்த மாதிரி முயற்சி எடுக்க வேண்டும் என்று தனது சகாக்களுடன் முகாமிட்டு விவாதித்து வருகிறார் காஜல்.